பகுத்தறிவைப்பரப்பும் நோக்கில் நம் தமிழர் தலைவர்களின் பொன் மொழிகளை இவ்விடத்தில் பதிவு செய்வதை ஒரு இன்றியமையாத கடமையாகக் கருதி நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவற்றை சிறு சிறு அளவில் வெளியிட்டு நம்மாலான தொண்டாற்றுவோம்.
ஈ.வெ.ராமஸ்வாமி நாயக்கர் ( பெரியார் ) :
விடுதலை, 13-ஏப்ரல்-1972:
" நீ வாழ்த்துவதால் உன் தமிழ்த்தாய்க்கு ஒரு கொம்பு முளைத்து விடுமா ? கடவுள் வாழ்த்து வேண்டாம் என்றால் உடனே தமிழ்த்தாய் வாழ்த்து.ஒரு முட்டாள்தனத்திற்கு பதில் இன்னொரு முட்டாள்தனம்"
விடுதலை , 01-ஜூன்-1954:
"நீ ஒரு கன்னடியன். அப்படியிருக்க, நீ எப்படி தமிழர்களுக்குத் தலைவனாக இருக்க முடியும்?" என்று என்னைக் கூடக் கேட்டார்கள். 'தமிழன் எவனுக்கும் அந்தத் தகுதி இல்லையப்பா' என்று நான் அதற்கு விடை சொன்னேன் ".
திராவிடர் கழக மாநாடு , 08-மே-1948 -- 09-மே-1948:
"என்னைப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் சொந்தப் பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்யவேண்டும். நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்தப் பகுத்தறிவை மட்டும் அல்ல உங்கள் மனசாட்சி என்பதைக் கூட கொஞ்சம் மூட்டை கட்டி வைத்துவிட வேண்டியது தான்"
மு.கருணாநிதி,
தினத்தந்தி, 12-ஜூலை-1999:
"இன்றைக்கு என்ன நிலை? சாதியை யார் உருவாகினார்கள் என்று சொல்கிறோமோ அந்த பிராமணர்கள் எங்கேயாவது ஆதி திராவிடர்களோடு சண்டை போடுகிறார்களா? ஒரு பிராமணரும் ஒரு தாழ்த்தப்பட்டவரும் மோதிக்கொண்டார்கள் என்று ஒரு செய்தி வருகிறதா?"
No comments:
Post a Comment